Translate

Tuesday, 29 September 2015

சீமை கருவேல மர தீமைகள்




Thursday, 31 May 2012


கருவேல மரங்கள் ஒரு கொடூர "கிருமி'

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள்



சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்: 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  

இதன் கொடூரமான குணங்கள்: 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்: 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை: 
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

நச்சுமரம்:
நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது

பெரிய பாதிப்புகள் :
நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.
புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.
மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 
இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  


கேரளாவின் விழிப்புணர்வு: 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்: 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் 

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம். இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!

"விறகு தேவை என்பதற்காக கருவேலமரம் வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!"



No comments:


Post a Comment





சேவை அமைப்பின் அடையாளம்


Monday, 21 September 2015

மரமும் மழையும்

மரமும் மழையும்.

இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா? என்ன? கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.

கேரளா சென்றுவிட்டு வந்தால் “எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்” என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ ? தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம்.

மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை.
மனிதன் இல்லையேல் மரங்கள் உண்டு.
பொது நலனோடு தாய் அறக்கட்டளை
புதுக்கோட்டை

மரம் வளர்ப்பு

நாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.
ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மதிப்பு $30,000 , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு $35,000 மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் $1,25,000 . அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.
மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் இயற்கை ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி விட்டார்கள். ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், ஆறுகளின் பாதையை-பெருக்கை கட்டுப்படுத்துதல், குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம், மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண் பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.
உதாரணமாக நமது வீட்டு செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம், வீட்டின் நான்கு முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால் குளிர்விப்பான்களுக்கு செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது. வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அண்மையில் அரசின் அறிக்கையில் குண்டு பல்புகளை ஒழித்தால் தமிழகத்தில் வருடத்திற்கு 600MW மின்சாரம் சேமிக்கலாம் என்று கூறியிருந்தார்கள், இதோடு ஒப்பிடுகையில் மரங்கள் மூலமான சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்குமல்லவா. மின்பற்றாக்குறையை போக்க நம்மாலான உதவி.
நாம் மரமோ அல்லது செடியோ வளர்க்கலாம். முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது வளர்க்க தேவைப்படும் இடம். ஒரு கனசதுர அடி அளவு மண் போதுமானது ஒரு பப்பாளி வளர்க்க. இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் ஒரு முருங்கை நட்டு விடலாம். இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் வேம்பு நட்டு விடலாம். மக்கள் மரங்களிடமும் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள். பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். பெரிதாக வளருமே கூரையை இடிக்குமே என்றும் காரணம் சொல்கிறார்கள், எந்த மரமும் ஒரே நாளில் அப்படி வளர்ந்து விடப்போவதில்லை எப்படி வளர வேண்டும் என நம்மால் தீர்மானிக்க இயலுமே! மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் பார்க்கிறார்கள். எந்த மரமும் வடிகட்டிய குடிநீரை எதிர்பார்பதில்லை, கழிவு நீரை திருப்பி விட்டாலும் போதும். மேலதிக பலனாக கொசுக்களிடமிருந்து விடுதலையும், நிலத்தடி நீரும் உயரும். கைவிடப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை இந்த வழியில் செயல்படுத்தலாமே!
வீடுகளை சுற்றி சுற்றுச்சுவர், கொஞ்சம் சந்து போல நிலம் இருந்தால் நெட்டலிங்க மரம் நடலாம். வீட்டில் தூசி சேராது. கிளைகள் பரப்பாது, உயரமாக வளரும். நகரமயமாகி வரும் சூழலில் நம் குழந்தைகள் ஆஸ்த்துமா, தோல் வியாதிகளில் இருந்து காக்கும். இதிலும் மக்களுக்கு புயல் வந்தால் சாய்ந்து விடும், வீடு இடிந்து விடும்!! என்றெல்லாம் அச்சம் இருக்கிறது!! மிக ஆழமாக தோண்டி நடலாம் அல்லது மாற்றுச் செடியாக சவுக்கு நடலாம்.
போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கம் இவற்றிற்கு வழங்கும் மானியங்கள் சலுகைகளும் ஒரு காரணம். நல்ல சேதியாக சாலைகள் அமைக்கப்படும் போது மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செயந்தி நடராசன் உறுதி அளித்துள்ளார்.
குறைந்த பட்சம் நம்மால் தொட்டிச்செடிகளாவது வளர்க்க இயலும். துளசி ஓமம் போன்ற மூலிகைச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். துளசி கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும். குறைவாக மண் ஈரமாகும் அளவில் நீர் தெளித்தால் போதுமாதலால் தரை வீணாகும் என்று கவலை வேண்டாம். அதிக வெளிச்சம் இல்லாத சூழலில் குரோட்டன்கள் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதின் மூலம் கட்டிட உள்ளமைப்பின் அழகும் கூடும். படரும் கொடிகள், அரளி, மல்லிகை, தாள் பூ, ஜினியா என வீட்டை அழகுபடுத்தும் செடிகள் ஏராளம் உண்டு.
இதற்கும் இடமில்லை என்றால், ஒரு தண்ணீர் பாட்டில் போதும், அதை வெட்டி தொங்க விட்டு அதிலும் செடிகள் வளர்க்கலாம்.
தலைகீழாகவும் செடிகள் வளர்க்கலாம்.
தாவரத்தின் தண்டானது நேர் ஒளி நாட்டமும், வேரானது நேர் புவி நாட்டமும் உடையது. தலைகீழாக வளர்க்கப்படுகையில் புவி ஈர்ப்பின் தடை இன்றி செடி அதிக நீர், சத்துகளை பெற்று அதிக வளர்ச்சி பெறும். நான் முயற்சித்து பார்க்கலாமென்றிருக்கிறேன். GoldFish in Bowl என்பது போல செடியின் வேர் பரவும் அளவே செடியின் வளர்ச்சியும் இருக்கும். போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின் சந்தை மதிப்பு மிக அதிகம். நேரமும், வளர்க்கும் முறைகளும், கொஞ்சம் கலைத்தன்மையும் தெரிந்து இருந்தால் போன்சாய் வளர்ப்பில் பணம் பண்ணலாம்.
மரம் வளர்க்கும் ஆவல் இருந்தாலும், சூழலுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்வது அவசியம். மா, ஆல், அரச மரங்கள் வேர்களை கிடைமட்டமாக நெடுந்தொலைவு பரப்புபவை. இவற்றை வீடுகளின் அருகில் வளர்ப்பது சரியல்ல. எங்கு பார்த்தாலும் பச்சையாக வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களால் இயற்கைக்கு ஒரு நன்மையையும் இல்லை. இவை காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வாழ்பவை. சுற்றுச்சூழலின் வெப்பத்தை அதிகரிப்பவை. மண்ணை மலடாக்குபவை. இவற்றை அழிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் பெறும் நன்மையாகும், மாற்று பயிராக பேரிட்சை விதைகளை நடலாம். குப்பையில் வீசக்கூடிய பேரிட்சை விதைகளை தரிசு நிலத்தில் வீசினாலும் போதுமே! பேரிட்சை, கற்றாழை, அரளி போன்றவை கவனிப்பாரின்றியும் வளரக் கூடியவை.
மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :
  1. மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது
  2. அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது
  3. நிழல் தரும் மரம் நடுவது.
இவை மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதே பலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு  நடலாம், நிழலாகி நிற்கும்.
குழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவை மனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வர செல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்த மனப்பயிற்சி.
நமக்கு முந்தைய தலைமுறையில் இல்லாத ஒன்றாக நாம் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம், எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்க போகும் முன் நாம் விழித்திடவும், செயல்புரியவும் வேண்டும். கைப்பிடி அளவு மணல் கிடைத்தாலும் அதில் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. விதைகள் தயாராய் உள்ளன. விதைப்பதற்கு நம் கரங்கள் தயாராக வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்! செய்வீர்களா?
பொது நலன் கருதி 
தாய் அறக்கட்டளை

Wednesday, 16 September 2015

மரம் ஒரு வரம்

மரம் ஒரு வரம்:
பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.
இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.
காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில்  எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க 700 கோடி மரங்கள்: ஐ.நா. திட்டம் :
புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை ஐ.நா நடவு செய்துள்ளது. இந்நடவடிக்கையில் மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை மரங்களுக்கும் காடுகளுக்கும் மட்டுமே உண்டு. மாறாக காடுகள் அழிக்கப்படுவதனால் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயு மொத்த கரியமில வாயு உற்பத்தியில் 20% பங்களிப்பு செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சுற்றுச்சூழல் திட்டம், உலக வேளாண் காடுகள் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006இல் மரங்கள் நடவு செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டது.
இந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், 13,74,76,771 மரங்களை நட்டு கியூபா 5வது இடத்திலும் உள்ளன.
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மையங்கள் மரம் நடும் நடவடிக்கைகளில் தங்களது கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.
உலக வனங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.
இந்த ஆண்டில்  நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்:

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல… ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒருமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினைஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்இருக்கின்றன. ஆனால்…. இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்பெறுகிறதா? இல்லை… ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்றசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை… ?
அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல…. அமைச்சர் நட்டிய மரக்கன்றுஎனும் செய்தி மட்டும்… அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படிதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்… நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல… நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்… மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்… நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்… நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு… நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்… எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம்.இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை… எனும் நிலை கோண்டு வருவோம்… வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு வருவோம்.
நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நாம் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறோம்… உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும், உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்… இது  நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்…

ஒரு நிமிடம் கண்ணை மூடி நம் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது, ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான் நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்.
அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம். அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க , ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்.
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது. நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்.
நல்ல வசதி உள்ள  உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் மீண்டும் கண்ணை மூடி நாம்  நம் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்.
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது.
நம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி ,சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும்  குறிக்கோள் அல்ல,
அந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம்.
மரம் வளர்ப்போம்
வாருங்கள்…
மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

“மரம் நடுதல்”

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு  நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.
தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள்  பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.
இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).
சரி நமது அரசாங்கங்கள் தான்  அப்படி  செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.
வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம்  .
மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.
ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.
இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்மழைபெறுவோம்!!
பொது நலன் கருதி
தாய் அறக்கட்டளை
புதுக்கோட்டை

Tuesday, 15 September 2015

சீமை கருவேலமர அரக்கன்


1950 ஆம் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன.
இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…! கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். 

சீமைக் கருவேல மரங்கள் :
இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. 
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.

எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
 சாலை ஓரங்களிலும்பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது. தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும்கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும்நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது.
ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி,அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சிதன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
 இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லைஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம் மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.

தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர்ராமநாதபுரம். கிருஷ்ணகிரிதருமபுரிசேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை. ஆனால்இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.
தங்கள் வீடுகளுக்கும்வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.
 

இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியாது இருக்கிறார்கள். இந்த மரத்தின் இலைகாய்விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான்.

அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து :

இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும்அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும்ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராதுதவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள்பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.

ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது. 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. 

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.  அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறிஅதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள்ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.
 கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள் ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…! 

சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் குளுமை பெறும். 
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! 

அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம். நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்இந்த செய்தியை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். சேலம் மாநகராட்சியில் இதுவரை 70 சதவிகித சீமை கருவேலமரங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

வெட்டுவதோடு மட்டும் நில்லாமல். நம் பாரம்பரிய பூ அரச மரம்அத்தி மரம்,ஆலமரம்,வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்....!
நம் மண்ணின் மாண்பை காப்போம்.....!