Translate

Wednesday, 16 September 2015

மரம் ஒரு வரம்

மரம் ஒரு வரம்:
பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.
இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.
காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில்  எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க 700 கோடி மரங்கள்: ஐ.நா. திட்டம் :
புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை ஐ.நா நடவு செய்துள்ளது. இந்நடவடிக்கையில் மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை மரங்களுக்கும் காடுகளுக்கும் மட்டுமே உண்டு. மாறாக காடுகள் அழிக்கப்படுவதனால் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயு மொத்த கரியமில வாயு உற்பத்தியில் 20% பங்களிப்பு செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சுற்றுச்சூழல் திட்டம், உலக வேளாண் காடுகள் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006இல் மரங்கள் நடவு செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டது.
இந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், 13,74,76,771 மரங்களை நட்டு கியூபா 5வது இடத்திலும் உள்ளன.
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மையங்கள் மரம் நடும் நடவடிக்கைகளில் தங்களது கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.
உலக வனங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.
இந்த ஆண்டில்  நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்:

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல… ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒருமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினைஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்இருக்கின்றன. ஆனால்…. இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்பெறுகிறதா? இல்லை… ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்றசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை… ?
அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல…. அமைச்சர் நட்டிய மரக்கன்றுஎனும் செய்தி மட்டும்… அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படிதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்… நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல… நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்… மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்… நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்… நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு… நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்… எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம்.இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை… எனும் நிலை கோண்டு வருவோம்… வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு வருவோம்.
நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நாம் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறோம்… உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும், உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்… இது  நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்…

ஒரு நிமிடம் கண்ணை மூடி நம் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது, ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான் நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்.
அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம். அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க , ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்.
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது. நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்.
நல்ல வசதி உள்ள  உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் மீண்டும் கண்ணை மூடி நாம்  நம் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்.
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது.
நம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி ,சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும்  குறிக்கோள் அல்ல,
அந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம்.
மரம் வளர்ப்போம்
வாருங்கள்…
மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

“மரம் நடுதல்”

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு  நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.
தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள்  பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.
இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).
சரி நமது அரசாங்கங்கள் தான்  அப்படி  செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.
வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம்  .
மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.
ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.
இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்மழைபெறுவோம்!!
பொது நலன் கருதி
தாய் அறக்கட்டளை
புதுக்கோட்டை

No comments:

Post a Comment